பூ முகம் சிவக்கா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அம்மா

இந்த பாடலை பற்றி :
அம்மா படத்திலிருந்து பூ முகம் சிவக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.பூ முகம் சிவக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்மா படத்தின் பூ முகம் சிவக்கா பாடலின் வரிகள்

பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பிள்ளை காணாமல் இங்கு வாடும் பூமாலை
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
குழு : ………………………….
பெண் : வேதனை வழக்கு விழிகளில் இருட்டு
திரியினைத் தேடுது விளக்கு
பால் முகம் நினைந்து மேலுடை நனைந்து
கிளி தவிக்கும் சிறையிருந்து
வெயிலை சுமப்பாள் நிழல் கொடுத்து
பெண் : அந்த ஆராரோ மறந்து
மனம் போராடும் நினைந்து
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பெண் : தாய்மையின் தவிப்பால்
குழந்தையை எடுப்பாள்
பூக்களினால் முகம் துடைப்பாள்
சேலையின் தலைப்பால் காற்றினைத் தடுப்பாள்
காயம் படும் என நினைப்பாள்
துரும்பு விழுந்தால் முகம் சிவப்பாள்
பெண் : அவள் தன் மேனி கொடுப்பாள்
தன் கண்ணீரில் இனிப்பாள்
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பெண் : தாய் விழி அழுதால் சூரியன் அழுமே
பாறைகளும் கசிந்திடுமே
பாலோடு அன்னை பசியோடு பிள்ளை
சோகங்களே அவள் வரமே
வெயிலில் வதங்கும் மலர் சரமே
பெண் : அந்த ஆகாயம் சிறிது
அவள் தியாகங்கள் பெரிது……
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பிள்ளை காணாமல் இங்கு வாடும் பூமாலை
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை
பெண் : அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்

அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

பூ முகம் சிவக்கா தேடல் சொற்கள்:
பூ முகம் சிவக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூ முகம் சிவக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூ முகம் சிவக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூ முகம் சிவக்கா பாட்டு
பூ முகம் சிவக்கா ஐடியூன்ஸ், பூ முகம் சிவக்கா tamil2lyrics
அம்மா பூ முகம் சிவக்கா
பூ முகம் சிவக்கா பாட்டு வரிகள்
பூ முகம் சிவக்கா படத்தின் பேர்
பூ முகம் சிவக்கா ரிங்டோன்
பூ முகம் சிவக்கா வரிகள்
பாடல் பூ முகம் சிவக்கா
ஷங்கர் கணேஷ் பூ முகம் சிவக்கா