யாேன் யென்னை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஆர். பார்த்தசாரதி
படம்: அவம்

இந்த பாடலை பற்றி :
அவம் படத்திலிருந்து யாேன் யென்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். பார்த்தசாரதி.யாேன் யென்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவம் படத்தின் யாேன் யென்னை பாடலின் வரிகள்

ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
இறைவன் இருக்கின்றானா…
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
ஆண் : நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ….ஆ…..
மனிதன் இருக்கிறானா…..ஆ….
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
பெண் : நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை
குழு : …………………………….
பெண் : கண்ணிலே உறுதி இல்லை
காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த
மறு நாள் இருக்கவில்லை
குடிசையில் ஓர் மனது
கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம்
கூடினால் பல மனது
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…
ஆண் : பார்ப்பவன் குருடனடி
படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று
கண்ணாடி காட்டுதடி
ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
பெண் : ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை
கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம்
இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதரென்றால்
இயற்கையும் நின்று விடும்
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…
ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால்
சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவரும்
சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை
மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு
வாழ்பவன் இறைவன் இல்லை
ஆண் : இறைவன் இருக்கின்றானா……ஆ….
பெண் : மனிதன் இருக்கிறானா……ஆ….
ஆண் : இறைவன் இருக்கின்றானா…
மனிதன் கேட்கிறான்
பெண் : அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே… வாழ்கிறான்…

அவம் படத்தின் மற்ற பாடல்கள்

யாேன் யென்னை தேடல் சொற்கள்:
யாேன் யென்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாேன் யென்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாேன் யென்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாேன் யென்னை பாட்டு
யாேன் யென்னை ஐடியூன்ஸ், யாேன் யென்னை tamil2lyrics
அவம் யாேன் யென்னை
யாேன் யென்னை பாட்டு வரிகள்
யாேன் யென்னை படத்தின் பேர்
யாேன் யென்னை ரிங்டோன்
யாேன் யென்னை வரிகள்
பாடல் யாேன் யென்னை
ஆர். பார்த்தசாரதி யாேன் யென்னை