நிலா காயும் நேரம்

This content is also available in: English

பாடகர்கள்: மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: செம்பருத்தி

இந்த பாடலை பற்றி :
செம்பருத்தி படத்திலிருந்து நிலா காயும் நேரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நிலா காயும் நேரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

செம்பருத்தி படத்தின் நிலா காயும் நேரம் பாடலின் வரிகள்

பாடகர்கள்: மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பெண் : நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

ஆண் : பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

பெண் : நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

ஆண் : தென்றல் தேரில் நாம் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி
பாடும் நல்ல வாழ்த்து

பெண் : கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்

ஆண் : நினைத்தால் இது போல்
ஆகாததேது
பெண் : அணைத்தால் உனைத்தான்
நீங்காது பூமாது

ஆண் : நெடுநாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

பெண் : நிலா காயும் நேரம் சரணம்
ஆண் : உலா போக நீயும் வரணும்

பெண் : மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட

ஆண் : அர்த்த ஜாமம் நான் சூடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்

பெண் : நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்
ஆண் : சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்

பெண் : அனைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

பெண் : பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்

ஆண் : அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

பெண் : நிலா காயும் நேரம் சரணம்
ஆண் : உலா போக நீயும் வரணும்

செம்பருத்தி படத்தின் மற்ற பாடல்கள்

நிலா காயும் நேரம் தேடல் சொற்கள்:
நிலா காயும் நேரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலா காயும் நேரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலா காயும் நேரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலா காயும் நேரம் பாட்டு
நிலா காயும் நேரம் ஐடியூன்ஸ், நிலா காயும் நேரம் tamil2lyrics
செம்பருத்தி நிலா காயும் நேரம்
நிலா காயும் நேரம் பாட்டு வரிகள்
நிலா காயும் நேரம் படத்தின் பேர்
நிலா காயும் நேரம் ரிங்டோன்
நிலா காயும் நேரம் வரிகள்
பாடல் நிலா காயும் நேரம்
இளையராஜா நிலா காயும் நேரம்