சின்ன கண்ணிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தோனி

இந்த பாடலை பற்றி :
தோனி படத்திலிருந்து சின்ன கண்ணிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்ன கண்ணிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோனி படத்தின் சின்ன கண்ணிலே பாடலின் வரிகள்

பெண் : சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
உன் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்
பெண் : இரு கை நீட்டி சிறு தலையாட்டி
இரு விழியாலே புது ஒளி கூட்டி
நான் வாழ வந்ததின்
அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
குழு : வைரமணிகளை சிரிப்பில் தெளிக்கிறாய்
மழலைப் பூவே வா……..
பெண் : சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
குழு : ………………..
பெண் : புதியது குழந்தை உலகம்
நுழைந்திட வழிகள் வேண்டும்
குழந்தையின் வயதும் மனதும்
கிடைத்திட வரங்கள் வேண்டும்
பெண் : ஒரு தீவில் பூக்கும் சிறு பூவைப் போலே
இதழை திறந்து பேசும் உனது மழலை போதும்
உன் மொழி தேன்மொழி என் மொழி வீண்மொழி
உன்னிடம் உள்ளது தெய்வத்தின் தாய்மொழி
அந்த ஆகாயம் இந்த பூலோகம்
அதைப் பிஞ்சுவிரல்களால் தாங்கிப் பிடிக்கிறாய் எப்படி…
ஆண் : சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
உன் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
பெண் : இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்
குழு : ………………………….
ஆண் : நடைவண்டி பழகும் வயதில்
நடந்திட நானும் முயன்றேன்
நடந்திட கடந்த தூரம்
உனக்கது தொடர வேண்டாம்
பெண் : இந்த உலகின் அழகை
நீ அழகு செய்தாய்
உன் சிரிப்பின் ஒளியில்
இரவை வெளிச்சம் செய்தாய்
ஆண் : உன்னிடம் பாடங்கள்
எத்தனை உள்ளது
என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளது
பெண் : சிறுகை தீண்டி என் மெய் தீண்டி
என் கர்வம் யாவையும் தீர்த்துப் போகிறாய் எப்படி …
ஆண் : சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
உன் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
பெண் : இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்
பெண் : இரு கை நீட்டி சிறு தலையாட்டி
இரு விழியாலே புது ஒளி கூட்டி
நான் வாழ வந்ததின்
அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
குழு : வைரமணிகளை சிரிப்பில் தெளிக்கிறாய்
மழலைப் பூவே வா……..

தோனி படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன கண்ணிலே தேடல் சொற்கள்:
சின்ன கண்ணிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன கண்ணிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன கண்ணிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன கண்ணிலே பாட்டு
சின்ன கண்ணிலே ஐடியூன்ஸ், சின்ன கண்ணிலே tamil2lyrics
தோனி சின்ன கண்ணிலே
சின்ன கண்ணிலே பாட்டு வரிகள்
சின்ன கண்ணிலே படத்தின் பேர்
சின்ன கண்ணிலே ரிங்டோன்
சின்ன கண்ணிலே வரிகள்
பாடல் சின்ன கண்ணிலே
இளையராஜா சின்ன கண்ணிலே