விளையாட்டா படகோட்டி ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தோனி

இந்த பாடலை பற்றி :
தோனி படத்திலிருந்து விளையாட்டா படகோட்டி ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.விளையாட்டா படகோட்டி ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோனி படத்தின் விளையாட்டா படகோட்டி ஆண் பாடலின் வரிகள்

பெண் : ………………..
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : தத்தி தத்தி நீரில் ஆடி
சுத்தி சுத்தி சுழலும்போதும்
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்
ஆண் : தன்னோட வழியெல்லாம்
தன்னைத் தவிர துணையுண்டோ
திசையெல்லாம் வழியாகும்
ஒரு வழிதான் உனக்காகும்
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : கட்டுமரம் என்றால் என்ன
வெட்டு பட்ட மரங்கள் தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே
பட்ட பாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப் பார்க்கும்
எட்டி நிற்க திரும்பத் திரும்ப விளையாடும்
ஆண் : கடலிறங்கும் கட்டுமரம்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்

தோனி படத்தின் மற்ற பாடல்கள்

விளையாட்டா படகோட்டி ஆண் தேடல் சொற்கள்:
விளையாட்டா படகோட்டி ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விளையாட்டா படகோட்டி ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விளையாட்டா படகோட்டி ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விளையாட்டா படகோட்டி ஆண் பாட்டு
விளையாட்டா படகோட்டி ஆண் ஐடியூன்ஸ், விளையாட்டா படகோட்டி ஆண் tamil2lyrics
தோனி விளையாட்டா படகோட்டி ஆண்
விளையாட்டா படகோட்டி ஆண் பாட்டு வரிகள்
விளையாட்டா படகோட்டி ஆண் படத்தின் பேர்
விளையாட்டா படகோட்டி ஆண் ரிங்டோன்
விளையாட்டா படகோட்டி ஆண் வரிகள்
பாடல் விளையாட்டா படகோட்டி ஆண்
இளையராஜா விளையாட்டா படகோட்டி ஆண்