ஆராரோ நீ ஆராரோ

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ் , அதிதி ராவ் ஹைதாரி
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து ஆராரோ நீ ஆராரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ் , அதிதி ராவ் ஹைதாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.ஆராரோ நீ ஆராரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் ஆராரோ நீ ஆராரோ பாடலின் வரிகள்

ஆண் : ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆண் : காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்
ஆண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்
பெண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
பெண் : நானனா நானனா
நானனா நானனா
நானனா…… நானனா….
நானனா…… நானனா…….
ஆண் : இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே
ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை
ஆண் : கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
பெண் : காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்…….ஓ….
பெண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்….
ஆண் : பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்
பெண் : புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்
ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை
பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை
ஆண் மற்றும் பெண் :
வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே
ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆண் மற்றும் பெண் :
ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்
ஆண் மற்றும் பெண் :
இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

ஆராரோ நீ ஆராரோ தேடல் சொற்கள்:
ஆராரோ நீ ஆராரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆராரோ நீ ஆராரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆராரோ நீ ஆராரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆராரோ நீ ஆராரோ பாட்டு
ஆராரோ நீ ஆராரோ ஐடியூன்ஸ், ஆராரோ நீ ஆராரோ tamil2lyrics
ராஜ முக்தி ஆராரோ நீ ஆராரோ
ஆராரோ நீ ஆராரோ பாட்டு வரிகள்
ஆராரோ நீ ஆராரோ படத்தின் பேர்
ஆராரோ நீ ஆராரோ ரிங்டோன்
ஆராரோ நீ ஆராரோ வரிகள்
பாடல் ஆராரோ நீ ஆராரோ
ஜி. வி. பிரகாஷ் குமார் ஆராரோ நீ ஆராரோ