கமல் கவிதை

This content is also available in: English

பாடகர்கள்: த்ரிஷா கிருஷ்ணன்,கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: மன்மதன் அம்பு

இந்த பாடலை பற்றி :
மன்மதன் அம்பு படத்திலிருந்து கமல் கவிதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் த்ரிஷா கிருஷ்ணன்,கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.கமல் கவிதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்மதன் அம்பு படத்தின் கமல் கவிதை பாடலின் வரிகள்

பாடகி : த்ரிஷா கிருஷ்ணன்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : கண்ணோடு கண்ணை
கலந்தால் என்றால்
கலங்கம் உள்ளவள்
எச்சரிக்கை

பெண் : உடனே கையுடன்
கை கோர்த்தாளா
ஒழுக்கம் கெட்டவள்
எச்சரிக்கை

பெண் : ஆடை களைகையில்
கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள்
எச்சரிக்கை

பெண் : கலவி முடிந்தபின்
கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம்
எச்சரிக்கை

பெண் : கவிதை இலக்கியம்
பேசினாலாயின் காசை
மதியால் எச்சரிக்கை

பெண் : உன்னுடன் இருப்பது
சுகம் என்றாளா
உறுதியாய் சிக்கல்
எச்சரிக்கை

பெண் : அறுவடை கொள்
முதல் என்றே காமம்
அமைவது பொதுவே
நலமாக கொள்

பெண் : கூட்டல் ஒன்றே
குறி என்றானபின்
கழிவது காமம்
மட்டும் எனக்கொள்

பெண் : உன்னை மங்கையர்
என்னென கொள்வர்
யோசிக்காமல்
வருவதை எதிர்கொள்

பெண் : முன்னும் பின்னும்
ஆட்டும் சகடை ஆணும்
பெண்ணும் அதுவே
எனக்கொள்

பெண் : காமம் எனப்படும்
பண்டை செயலில்
காதல் கலவாது
காத்துகொள்

பெண் : இப்பெண்ணுறைக்கு
எதிராய் ஆணுரை ஒன்றை
இயற்ற துணியும் அணி
சேர்த்துகொள்

ஆண் : ஆஹா இயற்ற
துணியும் அணி
சேர்த்துக்கணுமா
துணிவே அணியும்
துணி என்றானபின்
அணி ஒன்று எதற்கு
தனியே வருவேன்

பெண் : அப்படி வாங்க
வழிக்கு ஓ நீங்க
கவிஞர் தானே

ஆண் : கில்டி
அஸ் அக்கியூஸ்ட்
பெண் : அப்போ
ஜட்ஜ்மெண்ட்
சொல்றேன்
ஆண் : சொல்லுங்க
பெண் : பதிலுக்கு நீங்க
ஒரு கவிதை சொல்லணும்
அதான் தண்டனை

ஆண் : யாருக்கு
பெண் : அது கவிதைய
கேட்டா தானே
தெரியும்
ஆண் : ஆஹான்
ஹா ஹா ஹா சரி
சொல்றேன் ஆனா
நீங்க கோவிச்சுக்க
கூடாது
பெண் : ஏன் பெண்களை
பத்தி கேலியா
ஆண் : ச ச அதெல்லாம்
இல்லைங்க இது ஒரு
பெண்ணுடைய
வேண்டுகோள் மாதிரி
ஒரு பெண் தன்
தெய்வத்துகிட்ட
பாடுற தோத்திர பாடல்

பெண் : ஓ நீங்க
பக்திமானா
ஆண் : அதெல்லாம்
இல்லேங்க நான்
புத்திமானானே
கேள்விகுறியா இருக்கு
பெண் : கவிதைய கேட்டா
கேள்விகுறி ஆச்சர்ய
குறியா மாறலாம்
இல்லையா
ஆண் : ஹ்ம்ம்
மே பி மே ஐ
பெண் : ப்ளீஸ்

ஆண் : கலவி செய்கையில்
காதில் பேசி கனிவாய்
மெலிதாய் கழுத்தை
கவ்வும் வெள்ளை
பளிச்சிடும் பற்கள்
வேண்டும்

ஆண் : குழந்தை வாயை
நுகர்ந்தது போல கடும்
நாற்றம் இல்லாத
வாயும் வேண்டும்

ஆண் : காம கனவுகள்
கலையும் வேளையில்
கூட நின்றவன் உதவிட
வேண்டும்
குழு : வேண்டும்
சமையலின் போதும்
உதவிட வேண்டும்
குழு : வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட
தின் தோள் வேண்டும்
குழு : வேண்டும்

ஆண் : மோதி கோபம்
தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில்
நெஞ்சும் வேண்டும்
குழு : வேண்டும்

ஆண் : அதற்கு பின்னால்
துடிக்கும் இதயமும் அது
ரத்தம் பாய்ச்சி நெகுழ்த்திய
சிந்தையும் மூளை மடிப்புகள்
அதிகம் உள்ள மேதவிலாச
மண்டையும் வேண்டும்
குழு : வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : வங்கியின்
இருப்பு வீட்டில்
கருப்பென வழங்கி
புழங்கிட பணமும்
வேண்டும்
குழு : வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : நேர்மை வேண்டும்
பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம்
கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும்
வேண்டும்
குழு : வேண்டும்

ஆண் : இப்படி கணவன்
வர வேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு
இருந்தேன் வரம் தருவாள்
என் வரலட்சுமி என கடும்
நோன்பு முடிந்ததும் தேடி
போனேன்

பெண் : தேடி எங்க
போனா அந்த
பொண்ணு
ஆண் : பீச்சுக்கு தான்

ஆண் : பொடி நடை
போட்டே இடை
மெலியும் என
கடற்கரை தோறும்
காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள்
திரிவது கண்டேன்
முற்றும் துறந்து
மங்கையரோடு
அம்மண துறவிகள்
கூடிட கண்டேன்

பெண் : எங்க
டிவி லையோ
ஆண் : இஷ்……

ஆண் : மூத்த அக்காள்
கணவனுக்கு முக்கால்
தகுதிகள் இருந்தும் கூட
அக்காள் இல்லா வேளையிலே
அவன் சக்காளத்தி வேண்டும்
என்றான்

ஆண் : எக்குலம் ஆனால்
என்ன என்று வேற்று மதம்
வரை தேடி பார்த்தேன் வர
வர புருச லட்சணம் உள்ளவர்
திருமண சந்தையில் மிக
மிக குறைவு

ஆண் : வரம் தர கேட்ட
வரலட்சுமி உனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது
எப்படி நீ கேட்ட வரங்கள்
எதுவரை பலித்தது
உறங்கிகொண்டே இருக்கும்
உந்தன் அரங்கநாதன் ஆள்
எப்படி

ஆண் : பிரபந்தம் சொல்லும்
அத்தனை சேட்டையும்
வாஸ்த்தவமாக நடப்பது
உண்டோ இதுவும் அதுவும்
உதுவும் செய்யும் இனிய
கணவர் யார்க்கும் உண்டோ

ஆண் : உனக்கேனும் அது
அமைய பெற்றால்
உண்மையிலேயே
அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும்
அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி
நமோஸ்துதே

மன்மதன் அம்பு படத்தின் மற்ற பாடல்கள்

கமல் கவிதை தேடல் சொற்கள்:
கமல் கவிதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கமல் கவிதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கமல் கவிதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கமல் கவிதை பாட்டு
கமல் கவிதை ஐடியூன்ஸ், கமல் கவிதை tamil2lyrics
மன்மதன் அம்பு கமல் கவிதை
கமல் கவிதை பாட்டு வரிகள்
கமல் கவிதை படத்தின் பேர்
கமல் கவிதை ரிங்டோன்
கமல் கவிதை வரிகள்
பாடல் கமல் கவிதை
தேவி ஸ்ரீ பிரசாத் கமல் கவிதை