காத்திருந்த கண்களே

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை

இந்த பாடலை பற்றி :
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திலிருந்து காத்திருந்த கண்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.காத்திருந்த கண்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் காத்திருந்த கண்களே பாடலின் வரிகள்

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
பெண் : {மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன} (2)
ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
ஆண் : கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
இந்த வையகம் இருண்டதென்ன
பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து
இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன
பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
இருவர் : லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லால்லா…….

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

காத்திருந்த கண்களே தேடல் சொற்கள்:
காத்திருந்த கண்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காத்திருந்த கண்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காத்திருந்த கண்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காத்திருந்த கண்களே பாட்டு
காத்திருந்த கண்களே ஐடியூன்ஸ், காத்திருந்த கண்களே tamil2lyrics
மோட்டார் சுந்தரம் பிள்ளை காத்திருந்த கண்களே
காத்திருந்த கண்களே பாட்டு வரிகள்
காத்திருந்த கண்களே படத்தின் பேர்
காத்திருந்த கண்களே ரிங்டோன்
காத்திருந்த கண்களே வரிகள்
பாடல் காத்திருந்த கண்களே
எம். எஸ். விஸ்வநாதன் காத்திருந்த கண்களே

மறுமொழி இடவும்