சங்கர சிவன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜ ரிஷி

இந்த பாடலை பற்றி :
ராஜ ரிஷி படத்திலிருந்து சங்கர சிவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சங்கர சிவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ ரிஷி படத்தின் சங்கர சிவன் பாடலின் வரிகள்

ஆண் : ஓம் நம சிவாயா……(3)
ஆண் : ஓம் நம சிவாயா…..(10)
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே
மஞ்சம் தேடுமே
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
பெண் : குக்கு குகு கூ கூ கூ
என்று குயில் கூவாதோ
சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா
நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே
பெண் : உந்தன் அருகே வந்து தழுவும்
இன்ப நிலையம்
எந்தன் இடைதான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆண் : ஓம் நம சிவாயா…..(12)
பெண் : என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம்
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா
மாமுனி என வாழுவதா ஞானம்
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : காமனின் கலை தேறுவதே ஞானம்
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : நான்மறைகளை ஓதுவதா இன்பம்
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : நான்மறைவினில் கூடுவதே இன்பம்
ஆண் : ஓம் நம சிவாயா…..
பெண் : மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில்
கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா…
ஆண் : ஓம் நம சிவாயா…..(3)
பெண் : இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா…
ஆண் : ஓம் நம சிவாயா…..(3)
பெண் : தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா…
ஆண் : ஓம் நம சிவாயா…..(3)

ராஜ ரிஷி படத்தின் மற்ற பாடல்கள்

சங்கர சிவன் தேடல் சொற்கள்:
சங்கர சிவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சங்கர சிவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சங்கர சிவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சங்கர சிவன் பாட்டு
சங்கர சிவன் ஐடியூன்ஸ், சங்கர சிவன் tamil2lyrics
ராஜ ரிஷி சங்கர சிவன்
சங்கர சிவன் பாட்டு வரிகள்
சங்கர சிவன் படத்தின் பேர்
சங்கர சிவன் ரிங்டோன்
சங்கர சிவன் வரிகள்
பாடல் சங்கர சிவன்
இளையராஜா சங்கர சிவன்