நியாயம்தானா

This content is also available in: English

பாடகர்கள்: சம்ஹிதா மிரா,வர்மன் இளங்கோவன்
இசையமைப்பாளர்: ஷமேஷன் மணி மாறன்
படம்: சுகமாய் சுப்புலட்சுமி

இந்த பாடலை பற்றி :
சுகமாய் சுப்புலட்சுமி படத்திலிருந்து நியாயம்தானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சம்ஹிதா மிரா,வர்மன் இளங்கோவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன்.நியாயம்தானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் நியாயம்தானா பாடலின் வரிகள்

பாடகிகள் : சம்ஹிதா மிரா, ப்ரீதா பிரசாத்

பாடகர் : வர்மன் இளங்கோவன்

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

பெண் : நியாயம்தானா
நியாயம்தானா அன்பே
உன்னை மறந்து விட்டால்
நியாயம்தானா நியாயம்
தானா நானும் நாளும்
மறக்க விட்டால்

பெண் : ஏக்கம் உந்தன் தாக்கம்
என்னை மென்னு தின்ன
கெஞ்சும் மனம் கொஞ்சும்
உன்னை அள்ளி கொள்ள
காயம் பட்ட நெஞ்சம் சில
காலம் தேம்பும் காதல் கதை
கூறும் கண்ணில் தோன்றும்
ஈரம்

பெண் : நான் தனிமையிலே
உன்னில் தொலைந்திடவா
நித்தம் முனு முனுத்தேனே
ஓஓ அன்பை வழி மறித்தேனே
மிச்சம் வழி மட்டும் மிஞ்ச
மனம் நொந்து பதை
பதைத்தேனே

பெண் : நியாயம்தானா
நியாயம்தானா அன்பே
உன்னை மறந்து விட்டால்
நியாயம்தானா நியாயம்
தானா நானும் நாளும்
மறக்க விட்டால்

ஆண் : ஆசை கனவெல்லாம்
நிஜமாகும் வழி தேடி போகும்
என் பாதை தவறா பாசம் உயிர்
நேசம் இருந்தாலும் பயன்
இல்லை காதல் துணை
வாழ்வின் தடையா

ஆண் : சேதம் இனி போதும்
என உள்ளம் சொன்னாலும்
காதல் தருணங்கள் என் கண்
முன்னே தோன்றும் ஆசை
நிறைவேறும் வரை அன்பை
கொல்வேனோ அன்பின்
சிலுவைக்குள் என் ஆசை
மடியாதோ

ஆண் : நியாயம்தானா
நியாயம்தானா உன்னில்
என்னை சிறை எடுத்தாய்
நியாயம்தானா நியாயம்
தானா நெஞ்சை இன்று
சிதற விட்டாய்

பெண் : செஞ்ச பாவம் தான்
என்ன மனம் ரணமாய் மாறி
வதைக்க தாயாய் என்னை
நான் நினைக்க ஒரு உயிர்
துளி சேர்ந்திட மறுக்க

பெண் : காலம் வரும் வழி
தெரிந்தே கனவும் போகுது
கடந்தே கரையை தேடியே
அலைந்தே கடல் அலையோ
போகுது பிரிந்தே

ஆண் & பெண் : கருவினில்
உயிராகி காதல் பிறந்திடவே
கருணை கிடையாதோ விதியே
விதியே துயரங்கள் வரமாகி
வாழ்வும் இனித்திடவே வழி
ஒன்று தருவாயோ விதியே
விதியே

ஆண் & பெண் : நியாயம்தானா
நியாயம்தானா மாய வாழ்வே
நடப்பதெல்லாம் நியாயம்தானா
நியாயம்தானா நானும் ஆனேன்
நடை பிணமாய்

சுகமாய் சுப்புலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

நியாயம்தானா தேடல் சொற்கள்:
நியாயம்தானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நியாயம்தானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நியாயம்தானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நியாயம்தானா பாட்டு
நியாயம்தானா ஐடியூன்ஸ், நியாயம்தானா tamil2lyrics
சுகமாய் சுப்புலட்சுமி நியாயம்தானா
நியாயம்தானா பாட்டு வரிகள்
நியாயம்தானா படத்தின் பேர்
நியாயம்தானா ரிங்டோன்
நியாயம்தானா வரிகள்
பாடல் நியாயம்தானா
ஷமேஷன் மணி மாறன் நியாயம்தானா