மயக்கம் என்ன

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து மயக்கம் என்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.மயக்கம் என்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் மயக்கம் என்ன பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே } (2)

ஆண் : தயக்கமென்ன
இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை
தான் கண்ணே

பெண் : கற்பனையில்
வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண் : தேர் போலே
ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே
நீ ஆட

பெண் : பூவாடை
வரும் மேனியிலே
உன் புன்னகை
இதழ்கள் விளையாட

ஆண் : கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட

பெண் : கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட

ஆண் : மயக்கமென்ன
பெண் : ம்ம் ஹ்ம்ம் ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஹா
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே

பெண் : …………………

ஆண் : பாடி வரும்
வண்ண நீரோடை
உன்னை பாத பூஜை
செய்து வர

பெண் : ஓடி வரும்
அந்த ஓடையிலே
உன் உள்ளமும்
சேர்ந்து மிதந்து வர

ஆண் : மல்லிகை
காற்று மெல்லிடை
மீது மந்திரம் போட்டு
தாலாட்ட

பெண் : வள்ளி
மலைத்தேன்
அள்ளி எழுந்த
வண்ண இதழ்
உன்னை நீராட்ட

ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே

பெண் : ………………….

ஆண் : அன்னத்தை
தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி
நான் தொட மாட்டேன்

பெண் : கன்னத்தில்
இருக்கும் கிண்ணத்தை
எடுத்து மது அருந்தாமல்
விட மாட்டேன்

ஆண் : உன்னையல்லால்
ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட
மாட்டேன்

பெண் : உன் உள்ளம்
இருப்பது என்னிடமே
அதை உயிர் போனாலும்
தர மாட்டேன்

ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே
பெண் : ஆஆஆ
ஆண் : தயக்கமென்ன
பெண் : ஆஹாஹா
ஆண் : இந்த சலனமென்ன
பெண் : ஆஹாஹா
ஆண் : அன்பு காணிக்கை
தான் கண்ணே அன்பு
காணிக்கை தான் கண்ணே
பெண் : ஆஹாஹாஹாஆ

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

மயக்கம் என்ன தேடல் சொற்கள்:
மயக்கம் என்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மயக்கம் என்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மயக்கம் என்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மயக்கம் என்ன பாட்டு
மயக்கம் என்ன ஐடியூன்ஸ், மயக்கம் என்ன tamil2lyrics
வசந்த மாளிகை மயக்கம் என்ன
மயக்கம் என்ன பாட்டு வரிகள்
மயக்கம் என்ன படத்தின் பேர்
மயக்கம் என்ன ரிங்டோன்
மயக்கம் என்ன வரிகள்
பாடல் மயக்கம் என்ன
கே.வி. மகாதேவன் மயக்கம் என்ன